இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்குமா?ஐசிசி குழு ஆலோசனை ..!

இருநாடுகள் கிரிக்கெட் தொடருக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்வதையும் தவிர்த்து வந்தன. அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை உள்ளூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த முயற்சியின் முதல் வெற்றியாக தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூபிளசி தலைமையிலான உலக லெவன் அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்றனர். இது பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்புவதற்கான அறிகுறியாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த நிகழ்வைப் பார்க்கின்றனர். உலக லெவன் – பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் தொடருக்கு அங்கு ஏகோபித்த வரவேற்புக் கிடைத்தாலும், இந்திய அணி வீரர்களை மிஸ் செய்வதாக அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பாதுகாப்புக் காரணங்களுக்காக லாகூர் கடாஃபி மைதானத்தில் மட்டுமே உலக லெவன் அணியுடனான போட்டிகள் நடைபெற்றன.

Leave a Comment