வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி ?

தேவையானவை பொருள்கள் :
சிறியதாக நீளவாக்கில் நறுக்கிய வெண்டைக்காய் – ஒரு கப்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்.
கடலை மாவு – அரை கப்.
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்.
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: 

கடலை மாவுடன் அரிசி மாவு, வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து, அதில் கலந்து வைத்துள்ள மாவை உதிர்த்தாற்போல் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.இப்பொது  வெண்டைக்காய் பக்கோடா ரெடி. 

Leave a Comment