“எங்கள் அரசை குறை கூற அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கு?” – சித்தராமையா கடும் கண்டனம்!!

By

‘காங்கிரஸ் தலைமையிலான என் அரசாங்கத்தை ஊழல் கரை படிந்தது என்று சொல்ல அமித் ஷாவுக்கு என தகுதி உள்ளது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, அம்மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் உள்ளார்.
இந்நிலையில் அமித்ஷா, ‘கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஊழலில் திளைத்துள்ளது. இம்முறை மக்கள் அதை தூக்கி எறிந்துவிட்டு பா.ஜ.கவை வெற்றி பெற வைப்பார்கள்’ என்று கூறினார்.
இதற்கு சித்தராமையா, ‘என் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்தை ஊழல் கரை படிந்ததாகச் சொல்ல அமித் ஷாவுக்கு என்ன தகுதி உள்ளது? கடந்த நான்கு ஆண்டுகளும் எங்கள் ஆட்சி வெளிப்படையாகவும் ஊழல் இல்லாமலும் இயங்கி வருகிறது. எங்கள் அரசு ஆட்சி செய்கிற போது யாரும் சிறைக்குச் செல்லவில்லை. ஆனால், பா.ஜ.க தலைமையில் முன்னர் இயங்கிய அரசாங்கத்தால் அப்படி கூற முடியாது’ என்று பதிலடி கொடுத்தார்.