கூகிள் குரோம் பிரவுசரில் தெரியாத ரகசியங்கள்..!!உங்களுக்காக..

நீங்கள்  குரோம் பிரவுசரிலேயே சில சேவைகளை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் இசைப் பிரியர் என்றால், குரோம் பிரவுசரில் வெற்று டேப்பை (tab ) வரவைத்து அதில் ஆடியோ அல்லது வீடியோ கோப்பைக் கொண்டுவந்து வைத்தால் போதும் பாட்டு கேட்கலாம், வீடியோ பார்க்கலாம்.
மீடியா பிளேயருக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம். இதே போலவே பிடிஎப் கோப்புகளையும் குரோம் டேபிலேயே வைத்துப் படிக்கலாம். இதற்கும் வெற்று டேப்பில் கோப்பை இழுத்து வந்தால் போதுமானது. கோப்புகளை ஜூம் செய்யும் வசதியும் அச்சிடும் வசதியும் உண்டு.இது புதிய பயனாளருக்கு மிகவும் எளிதாக இருக்கும் .
author avatar
Dinasuvadu desk

Leave a Comment