காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்த சீனா..! அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்து பாகிஸ்தானுக்கு சீனா பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் விரும்பியது. அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும்படி சீனாவைப் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. 
ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கையை சீனா நிராகரித்தது. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவுடன் பேசித்தீர்க்குமாறும் அதற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குமாறும் சீனா அறிவுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் சீனா தலையிடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் லூ ஹாங்க் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால்  காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் நோக்கம் சிதைந்தது. மேலும் இதுவரை இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்துவந்த சீனா, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியதால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதை வழிமொழிவதுபோல் சீனா நடந்துகொண்டதால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் உள்ளது.
இந்தியா தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக ஐநாவில் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த ஒரே நாடான சீனாவும் தற்போது பின்வாங்கி பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment