நயன்தாராவுக்கு விரைவில் திருமணமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஏற்கனவே இரண்டு முறை காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் இருவரும் ஒன்றாக காதல் பறவைகளாய் உலா வருகின்றனர். இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையங்களில் வைரலாகியுள்ளன. இருவரும் தீவிரமாக காதலித்து வரும் நிலையில், விரைவில் இருவரும் ரகசிய  திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Comment