உலக பாட்மிண்டன் சேம்பியன்ஷிப்-இறுதி போட்டிக்குள் இந்தியாவின் பிவி.சிந்து…

0
119

உலக பாட்மிண்டன் சேம்பியன்ஷிப் பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கணை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூபேவை எதிர்த்து 21: 13. 21:10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று  நடைபெற்ற பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதியில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, பத்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து அதிரடியாக ஆடினார். 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.
இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகாராவை சந்திக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இது இவரது 3-வது பதக்கமாகும்.
ஏற்கனவே 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here