மெர்சல் படத்தை புகழ்ந்து தள்ளும் ராஜமௌலி….அடுத்த படம் தளபதியுடனா…?

0
190

தெறி படத்தின் வெற்றியை அடுத்து மெர்சலுக்காக தளபதியுடன் கைகோர்த்துள்ள அட்லீ ரசிகர்களை மெர்சலாக்க மூன்று நாயகிகள், மிரட்டும் வில்லன்கள் என தீபாவளிக்கு ட்ரீட் தர பக்காவாக தயாராக வைத்துள்ளார்.
தளபதி விஜய்யின் மெர்சல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மிகுந்த எதிர் பார்க்கும் அளவிற்கு ஒரு ஆவலை ஏற்படுத்தியுள்ளது. வரும் தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு இது தான் மிக பெரிய விருந்து என்று கூட சொல்லணும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்த தீபாவளிக்கு மெர்சல் மெகா ட்ரீட்டாக இருக்க போகிறது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் பெருமையாக சொல்லி வருகிறது.
முதல் முறையாக விஜய் படம் தீபாவளிக்கு மிக பெரிய அளவில் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகள் மிக பெரிய அளவில் தெலுங்கு உரிமம் வாங்கியுள்ள தயாரிப்பாளர் செய்து வருகிறார். மேலும் இப்படத்தின் டீசர் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த  இயக்குனரான ராஜமௌலி இன்று வெளியிடுகிறார்.
[email protected] about Thalapathy @actorvijay, @Atlee_dir, @ThenandalFilms’s #Adirindhi. Telugu teaser release tomorrow at 6PM. #Mersal pic.twitter.com/CIKKytVW4m
— Turmeric Media (@turmericmediaTM) September 29, 2017
‘மெர்சல்’ டீசர் வெளியிட்டை பற்றியும் படத்தை பற்றியும் பேசிய ராஜமௌலி மெர்சல் மிக சிறந்த படமாக வரும் என்று கூறினார் அதோடு இந்த வருடத்தின் நிச்சயம் ஒரு முக்கிய படமாக அமையும் என்றும் கூறினார். அதோடு இயக்குனர் அட்லீக்கும் விஜய்க்கும் வாழ்த்து தெரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here