Uncategory
முப்படை தளபதிகளை தினந்தோறும் சந்திக்க முடிவு-நிர்மலா சீதாராமன் தகவல்..!
ராணுவத் தளபதிகளுடன் தினந்தோறும் சந்தித்து ஆலோசனை நடத்துவது என்றும் இதன் மூலம் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராக கடந்த 7ம் தேதி, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, இத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முப்படை தளபதிகளுடன் தினசரி சந்தித்து பேசுவது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு ெசய்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
