Categories: Uncategory

சென்னைகே தண்ணிக்காட்டி விட்டு டிஎன்பிஎல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தூத்துக்குடி அணி !!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 26 பந்துகளில் 33 ஓட்டங்களும், அந்தோணி தாஸ் 17 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிய காந்தி 9 ஓட்டங்களில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக், முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்தார் அபிநவ் முகுந்த்.இந்த ஜோடி அசத்தலாக ஆட, 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், அபிநவ் முகுந்த் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதன்மூலம் முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தூத்துக்குடி அணி.
Castro Murugan
Tags: sports

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

29 mins ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

46 mins ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

1 hour ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

8 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

11 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

13 hours ago