வதந்திகளை பரப்பி மத கலவரத்தை தூண்டிய பாஜக ஐடி பிரிவு செயலாளர் கைது…!

வதந்திகளை பரப்பி மத கலவரத்தை தூண்டிய பாஜக ஐடி பிரிவு செயலாளர் கைது…!

கொல்கத்தா:மதக்கலவரத்தை தூண்டும் வகையில போலி தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி கலவரத்தை தூண்டிய  பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் ( ஐடி ) அமைப்பு செயலாளர் தருண் சென்குப்தா-வை இன்று மேற்கு வங்க காவலர்கள் கைது செய்தனர்.
பாஜக இந்தியாவில் மதகலவரத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றும் யுத்தியை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது மேற்கு வங்கத்தை குறிவைத்து செயல்படுகிறது. தனது வழக்கமான பாணியான போலியாக புகைப்படம், மற்றும் வீடியோக்களை உருவாக்கி அதனை வன்முறையை தூண்டும் விதத்தில் உண்மைபோல் சமூக வலைத்தளங்களில் பரவ விடுவது. பின்னர் தங்களின் ஆட்களை கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் கலவரத் தீயை பற்ற வைத்து மாநிலம் முழுவதும் பரவச்செயவது வாடிக்கையாகும். இது  போன்ற  மதக்கலவரத்திற்கு பின் நடக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது பல்வேறு ஆய்வு முடிவுகளும் உறுதி செய்திருக்கிறது.
இந்நிலையிலேயே மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் தணிந்து வரும் நிலையில்  , அதை மீண்டும் ஊதி பெரிதாக்கும் விதமாக , குஜராத் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தற்போது மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையின் போது எடுக்கப்பட்டது என கூறி பொய்யான தகவல் களை பாஜகவின் ஐடி பிரிவினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இதில் ஏற்கனவே  பாஜக-வின் தேசிய பேச்சாளர் நுப்பூர் சர்மா கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், பாஜக தகவல் தொழில் நுட்ப அமைப்பு செயலாளர் தருண் சென்குப்தா, ஐபிஎஸ் அதிகாரி தனிநபர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு, அது கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி அன்று எடுக்கப்பட்ட படம் என போலியான தகவலை கூறி அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதையடுத்து , மதவன்முறையை  தூண்டும் படியான போலி தகவல்களை பரப்பியதற்காக தருண் சென்குப்தாவை மேற்கு வங்க காவலர்கள் இன்று கைது செய்தனர் என மத்திய குற்றப்புலனாய்வு துறை டிவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டிருக்கிறது.
நபிகள் நாயகத்தை போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை 17 வயது சிறுவன் பேஸ்புக்-கில் வெளியிட்டதை தொடர்ந்தே  மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத் தீ பற்றவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *