ஐஎஸ் தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: அமெரிக்க தளபதி

0
214

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி உயிருடன் இருக்கிறார் என்று அமெரிக்க ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்ஸண்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி சில மாதங்களுக்கு முன் கொல்லபட்டதாக, ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் அல்பாக்தாதி உயிரோடு இருக்கலாம் என அமெரிக்க ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்ஸண்ட் தெரிவித்திருக்கிறார்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் கூட்டணி படைகளை கட்டுப்படுத்தும் அமெரிக்க ராணுவ தளபதியான அவர் கூறும்போது, ‘பாக்தாதி உயிருடன் இருப்பதாக நம்புகிறேன். அவர் இறந்து விட்டார் என்பது வதந்தியாக இருக்கலாம். அவர் இறந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவுகளில் அவர் உயிருடன் இருப்பதாக சில குறிப்புகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here