சவுதி மன்னர் அடுத்த ஆண்டு அமெரிக்கா வருகிறார்: வெள்ளை மாளிகை தகவல்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப மற்றும் சவுதி மன்னர் சல்மான் ஆகியோர் ஒப்புக் கொண்டதன் பேரில், அடுத்த ஆண்டில் சவுதி மன்னர் சல்மான் வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த தகவலை இருநாட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment