தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடையாக நிற்போம் : நல்லகண்ணு பேட்டி

0
144

ஸ்ரீவைகுண்டம்:  நல்லகண்ணு கூறுகையில், ” ஸ்ரீவைகுண்டம் அணை 7 பிரிவாக பிரிக்கப்பட்டு தூர்வார திட்டமிடப்பட்டதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. தூர்வார வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் அரசை ஏமாற்றி பலகோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. 

சாயர்புரம், காயல்பட்டினம், சாத்தான்குளம், பேய்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட உறை கிணறுகளுக்கு மிக அருகில் மணல் அள்ளியதால் தற்போது உறைகிணறுகள் தண்ணீரின்றி வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக போர்கள் அமைத்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். ஆற்றின் கரையோரத்தில் உள்ள அனைத்து பனைமரங்களும் தண்ணீரின்றி கருகியுள்ளன. இதை நேரில் பார்வையிட்ட நாங்கள் இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்க உள்ளோம்” என்றார். 

இதனிடையே, கொங்கராயகுறிச்சியில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்படுவது குறித்து கேட்டபோது, ”எங்களைப் பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றில் எந்தவொரு இடத்திலும் மணல் அள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்களின் எதிர்ப்பை மீறி யாராலும் மணல் அள்ள முடியாது, மணல் குவாரி அமைக்க முன்வந்தால் அதை நிச்சயமாக போராடி தடுப்போம்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here