‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் உரிமைக்கு கடும் போட்டி

0
172
தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தைத் தொடர்ந்து, அதன் தமிழ் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது.
சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகியிருக்கும் தெலுங்கு படம் ‘அர்ஜுன் ரெட்டி’. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பார்த்து தங்களுடைய சமூகவலைதளத்தில் பாராட்டி புகழந்து வருகிறார்கள். இயக்குநர் ராஜமெளலி, சமந்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
இதனால் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தைப் பார்த்த பலரும் இதனை டப்பிங் செய்யலாம், ரீமேக் செய்தால் சரியாக இருக்காது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னொரு புறம் இதன் ரீமேக்கில் நடிக்க சிம்பு, விஜய் சேதுபதி, அசோக் செல்வன் ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.
பல்வேறு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே, ரீமேக் உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here