Categories: Uncategory

இயற்கை விவசாயம் : தனியார் : நிடி அயோக்

புதுடில்லி:
‘‘மர­பணு மாற்ற விதை­கள், ரசா­யன உரங்­கள் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தா­மல், பாரம்­ப­ரிய விதை­கள், இடு பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் விளை­யும், இயற்கை விவ­சா­யப் பொருட்­கள் விற்­ப­னைக்கு, தனி சந்­தையை ஏற்­ப­டுத்த வேண்­டும்,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் தலைமை செயல் அதி­காரி, அமி­தாப் காந்த் வலி­யு­றுத்தி உள்­ளார்.

 சர்­வ­தேச பொரு­ளா­தார உற­வு­கள் குறித்து ஆய்வு செய்­யும், தேசிய கவுன்­சில், ‘இந்­தி­யா­வில் இயற்கை விவ­சா­யம்’ என்ற ஆய்­வ­றிக்­கையை தயா­ரித்­துள்­ளது. இதை வெளி­யிட்டு, அமி­தாப் காந்த் பேசி­ய­தா­வது: இந்­தி­யா­வில், சிக்­கிம், நாகா­லாந்து, அரு­ணாச்­சல பிர­தே­சம் ஆகி­யவை, இயற்கை விவ­சா­யத்­திற்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கின்றன. இதை, மற்ற மாநி­லங்­களும் பின்­பற்ற வேண்­டும். குறிப்­பாக, மழை பொழிவு அதி­க­ம் உள்ள, மத்­திய மற்­றும் மேற்கு பிராந்­தி­யங்­க­ளி­லும், ரசா­யன உரங்­கள் குறை­வாக பயன்­ப­டுத்­தப்­படும், கிழக்கு பகு­தி­க­ளி­லும், இயற்கை வேளாண்மை ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இயற்கை விவ­சா­யத்­தில், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன. இத்­துறை வளர வேண்­டும் என்­றால், அரசை ஒதுக்­கி­விட்டு, தனி­யார் துறை­யி­னர் களத்­தில் இறங்க வேண்­டும். தனி­யார் நிறு­வ­னங்­கள், பாரம்­ப­ரிய விதை­கள், இயற்கை வேளாண் முறை­யில் உரு­வாக்­கப்­பட்ட விதை­கள், ரசா­யன கலப்­பில்­லாத உரங்­கள் ஆகி­ய­வற்­றின் உரு­வாக்­கத்­தி­லும், விற்­ப­னை­யி­லும் ஈடு­பட வேண்­டும். ஒரு­சில விவ­சாய குழுக்­கள், இயற்கை வேளாண் பொருட்­கள் உற்­பத்­தி­யில் ஈடு­ப­டு­கின்றன. 


இதில், தனி­யார் நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்­கும்­பட்­சத்­தில், சிறந்த தர­மான விளை பொருட்­களை உரு­வாக்க முடி­யும். விளை பொருட்­களின் தரம் சிறப்­பாக இருந்­தால், இயற்கை விவ­சா­யத் துறை சீரிய வளர்ச்சி காணும்.தற்­போது உள்ள சந்தை முறை தான், இயற்கை விளை பொருட்­க­ளுக்கு கடும் சவா­லாக உள்­ளது. இச்­சந்­தை­களில் விற்­கப்­படும் விளை பொருட்­களை, இயற்கை முறை­யில் விளை­விக்­கப்­பட்­டவை எனக்­கூறி, ஏமாற்­று­வது நடக்­கிறது. அத­னால், இயற்கை விளை பொருட்­க­ளுக்கு என, தனி சந்­தை­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். அது, சிறிய மற்­றும் நடுத்­தர விவ­சா­யி­களின் விளை பொருட்­க­ளுக்கு, உரிய விலை கிடைப்­பதை உறுதி செய்­யும்.

இயற்கை வேளாண் பொருட்­க­ளுக்கு, உணவு பாது­காப்பு மற்­றும் தரங்­கள் ஆணைய விதி­மு­றை­கள் இல்­லா­த­தால், அவற்­றின் விற்­ப­னை­யில் மோசடி நடக்­கிறது. இதை தடுக்க, இயற்கை விளை பொருட்­க­ளுக்கு, ஒரே சீரான தர நிர்­ணய நடை­முறை தேவை. இவ்­வகை பொருட்­க­ளுக்கு என, தனி முத்­திரை, ‘பேக்­கே­ஜிங்’ மற்­றும் மோச­டிக்கு தண்­டனை வழங்­கும் விதி­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­கள் ஏற்­று­மதி வளர்ச்சி ஆணைய விதி­க­ளின்­படி, தற்­போது, வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன. இதே விதி­களை, இயற்கை வேளாண் பொருட்­களின் உள்­நாட்டு விற்­ப­னைக்­குக்கு பின்­பற்­ற­லாம். இவ்­வாறு அவர் பேசி­னார்.

Castro Murugan
Tags: economicFood

Recent Posts

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

31 mins ago

மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!

Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…

46 mins ago

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…

47 mins ago

என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

2 hours ago

சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…

2 hours ago

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…

3 hours ago