பாலியல் தொழிலாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை சதா…!!

புதுமுகங்கள் உதயா, சிவசக்தி, தினேஷ், இயக்குனர் வெங்கடேஷ், ரித்விகா உட்பட பலர் நடிக்கும் படம், ’டார்ச்லைட்’. இதை அப்துல் மஜித் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது பாலியல் தொழிலாளியை பற்றிய கதையை கொண்ட படம். பாலியல் தொழிலாளியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர். பிறகு நடிகை சதா சம்மதம் தெரிவித்தார். ரித்விகாவும் அந்த கேரக்டரில்தான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . வழக்கமாக படங்களில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் கதையாக இந்தப் படம் இருக்காது. அவர்கள் ஏன் இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள், எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படமாக இருக்கும். அவர்களின் மற்றொரு பக்கத்தை சொல்வதாகவும் இருக்கும். இதற்காக சில பாலியல் தொழிலாளிகளை சந்தித்து அவர்களின் உண்மையான கதைகளை கேட்டு இதில் சேர்த்து நடிகைகளை நடிக்க கதை எழுதிள்ளேன்  . தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும்’ என்றார்.

ஏற்கனவே சதா சங்கர் இயக்கத்தில்  விக்ரமுடன் இணைந்து நடித்த அந்நியன் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.