மருத்துவ சேர்க்கை நிறுத்தி வைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராக முடியாத மாணவர்கள்; மறுபுறம், நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்த, இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. நீட் தேர்வு எழுதி, தகுதி பெற்றுள்ள மாணவர்களின், ரேங்க் பட்டியல், மாநில கல்வி வாரிய மெரிட் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். மாநில கல்வி வாரியத்தில்படித்த எத்தனை பேர், நீட் தேர்வை எழுதினர், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.
இதனால் அவசர சட்டத்தை பிறப்பிக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வராது என்றே தெரிகிறது.அவசர சட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு ஏற்படும்.   இதுவரை, எந்த பிடியும் இல்லாமல் காத்துக் கிடக்கும், நீட் ஆதரவு தரப்பு  கோர்ட் படியேற தயாராகும் நிலை வந்துள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment