தடுப்பணைகளால் புதிய ஆபத்து ஏரலில் கடையடைப்பு…!

தாமிரபரணி  ஆற்றில் ஆண்டுதோறும்  வரும் வெள்ளம் கரைபுரண்டு   ஓடி கடலில் கலப்பது  இயற்கையானது.
வீணாக கடலில் கலக்கும் நீரை  தாமிரபரணி  ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து சேமிக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து  போராடிவந்தனர்.
இதன் எதிரொலியாக  பழமையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தொடர்ந்து  குரங்கணி,வாழவல்லான் பகுதிகளில்  தடுப்பணை அமைக்கப்பட்டது.தற்பொழுது ஆத்தூரை அடுத்த சேர்தபூமங்கலம்  பகுதியில் தடுப்பணை பணிகள் துரிதமாக நடந்துவருகிறது,
பெருகி வரும் மக்கள் தொகைக்கு குடிநீர்  வழங்கவும்,விவசாயிகள்,புதிய ஆலைகளுக்கு தடையின்றி நீரை வழங்கிய பயனுள்ள தடுப்பணைகளால் தற்பொழுது  புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
   
ஆண்டுதோறும்  மழை,வெள்ளம் வந்த போது பிரச்சனை ஏற்பட்டதில்லை.ஆனால் கடந்த இரு ஆண்டாக மழை பெய்யாததால் இதில் உள்ள பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து  ஏரலில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது,
 
தற்பொழுது  ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி. குடிநீர்  தட்டுப்பாட்டை தடுப்பணைகளால் தடுக்க முடியவில்லை,நிலத்தடி நீரை பெருக்கவே பயன்பட்டுள்ளது
 
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் சேமிக்கப்பட்ட நீரை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப கால்வாய்கள் உள்ளது
அதனை அடுத்துள்ள குரங்கணி,வாழவல்லான்  தடுப்பணைகளில் இந்த வசதியில்லாததால் ஏரல் ,வாழவல்லான் ,உமரிக்காடு,முக்காணி ,ஆத்தூர்  பகுதிகளில் ஆறு வரண்டு காணப்படுகிறது,
குடிநீர்க்காக அணைகளில் குறைந்த அளவு தண்ணீர்  திறக்கப்பட்டாலோ,மழை பெய்த நீர் வந்தாலோ அவை  குரங்கணி அணையில் தடுக்கப்பட்டுவிடும்,

ஆற்றில் வெள்ளம் வந்து தடுப்பணையை தாண்டி நீர் வந்தாலே  அதற்கு கீழ் உள்ள ஊர்களுக்கு தண்ணீர்  வர வாய்ப்புள்ளது,

முன்பு ஆத்தூர்  பகுதியில் எங்காவது மழை பெய்தாலே  தண்ணீர் ஓடி கொண்டிருந்தது.தற்பொழுது  கடந்த வெள்ளத்தின் போது உள்ள நீரே உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.குளிப்பதற்கு கூட இவை பயன்படுவதில்லை. தற்பொழுது இங்கு சமூக விரோதிகளால் மணல் தடுப்பணை உடைக்கப்பட்டு சுமார் 7கிலோமீட்டர் கடல் நீர் உட்புகுந்து உப்பாகி கால்நடைகளும் குடிநீர்க்கு அலைமோதுவதை காணமுடிகிறது ,

குரங்கணி தடுப்பணையில் நீர் வெளியேற்றும் மதகு வைத்தால் வாழவல்லான் தடுப்பணையிலும் வைக்க வேண்டுமென்பது உமரிக்காடு, முக்காணி.ஆத்தூர்  பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தடுப்பணைகள் வெள்ள நீரை மட்டுமே தடுக்க வேண்டும் ,அனைவர்க்கும் பொதுவான மழை நீரை தடுக்க கூடாது என சமூக ஆர்வலர் ஆத்தூர்  M.தேவாரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று குரங்கணி தடுப்பணையை திறந்து விடக் கோரி ஏரலில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிது.

வாழவல்லான் தடுப்பணையை தாண்டி 24.11.2015 அன்றுவெள்ளம் செல்லும் வீடியோ காட்சி.இது போன்ற வெள்ளம் வந்தாலே தடுப்பணைக்கு மறுபுறம் உள்ளவர்கள் பயன்பெற முடியும்.குடிநீர்க்காக அணையில் சிறிதளவு திறக்கப்பட்டாலோ அல்லது நெல்லை மாவட்டங்களில்  பலத்த மழை பெய்த நீர் வந்தாலோ குரங்கணி தடுப்பணையில் தடுக்கப்பட்டுவிடும்,

Leave a Comment