மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை 355கி.மீ.வேகத்தில் தாக்கியுள்ளது.இதை தேசிய பேரிடர் ஆக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான புயலுக்கு ஹார்வே எனப் பெயரிடப்பட்டுள்ளது.4ம் எண் புயலாக வலுவடைந்துள்ள இந்த புயல் டெக்சாஸ் மாகாணத்தை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தாக்கியது.கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்களும் வேருடன் சாய்ந்துள்ளன.பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.