தமிழகத்துக்கு இன்றோ நாளையோ தேர்தல் வரலாம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி…

சென்னை : திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் தமிழகத்துக்கு “இன்றோ அல்லது நாளையோ கூட தேர்தல் வரலாம்”  டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறினர்.
மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்வதுடன், மத்திய குழு, தமிழக அரசின் மீது தவறில்லை, பொதுமக்கள் தான் டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறாரே? இதை சொல்வதற்கு இருந்து குழு வந்திருக்க வேண்டியது அவசியம் இல்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இதுவரை அறிக்கையை வெளியிடாதது போலவே, இப்போது வந்திருப்பதும் ஒரு வீண் குழு இதுவாகும். டிசம்பருக்குள் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறாரே? டிசம்பர் மாதம் வரை என்பது கூட அதிகம் தான். அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இன்றோ அல்லது நாளையோ கூட தேர்தல் வரலாம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment