படம் வெளியான பின்னரும் நீளும் பிரச்சினை ..மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. குறித்த காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தல் !

Image result for mersal

இளையதளபதி  விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு கட்டமாக பல பிரச்சினைகளை சந்தித்து வந்தது .ஒரு வழியாக படமோ தீபாவளிக்கு வெளியானது .ஆனால் படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது அதிகாரப்பூர்வமான காரணம்.ஆனால், படத்தைப் பார்த்த பலருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு ஏன் தடைகள் என்பதற்கான காரணத்தை நேற்று புரிந்து கொண்டிருப்பார்கள்.காரணம்  படத்தின் ஆரம்பத்தில் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைப் பற்றி நடிகர்  வடிவேலு கிண்டலடித்துப் பேசுகிறார். அதோடு மட்டும் அல்லாமல்  படத்தின் கிளைமாக்சில் ‘8’ சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் இலவச மருத்துவம் கொடுக்க முடியாதா,” என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு காட்சிகளுக்கும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததோடு சமூக வலை தளங்களிலும் அதை பற்றி மேமேஸ் போட்டனர் . இப்போது இந்த இரண்டு காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். ‘மெர்சல்’ விவகாரம் படம் வெளிவந்த பிறகும் நீளும் என்றே தோன்றுகிறது.
இந்த பிரச்சினை படம் வெளியான பிறகும் மீண்டும் வருவதால் அந்த படக்குழுவினர் மட்டும் அல்லாமல் விஜய் ரசிகர்களும் மிகவும் கவலை அடைந்ததுள்ளனர். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment