கந்துவட்டி கொடுமை : திரைபிரபலங்கள் கருத்து

கந்துவட்டி கொடுமையால் நேற்று நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலக்ட்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். அதில் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் தமிழ் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில்  இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ” கந்து வட்டி ஒரு பாவசெயல் : கந்துவட்டி ஒரு பெருங்குற்றம் : கந்துவட்டி ஒரு மனித தன்மையற்ற செயல் ” என தெரிவித்துள்ளார் இதற்கு
நடிகை ‘பிக் பாஸ்’ ஆர்த்தி ” சரியாக சொன்னிங்க சார் ” என ரீ-டிவீட் செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்
“மனிதன் பணத்தினை உருவாக்கினான்
இன்று பணம் மனிதனை அழிக்கின்றது
விலைமதிப்பில்லாத உயிரையும் அச்சடித்த காகிதம் பறிக்கும்
#NellaiFamilyAblaze 
தீயின் நாக்குகள் அநீதியையும் கொடுமைகளையும் சுட்டெரிப்பது எப்போது..?? ? ..”

Leave a Reply

Your email address will not be published.