காசியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்

காசியில் ஒருமுற  காசி விஸ்வநாதர் யாசகன் வேடம் அணிந்து யாசகம் கேட்டு காசியில் வலம் வந்தார். அப்போது  அனைத்து செல்வந்தர் வீட்டுக்கும் சென்றார் அப்போது அனைத்து வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. பின் அனைத்து நடுத்தர வர்கத்து வீட்டுக்கும் சென்றார். அங்கேயும் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்தன.

பின் காளைத்து போய் கங்கை ஆற்றின் கழிவு நீர் தேங்கும் இடத்தில் சென்று பார்த்தபோது ஓர் தொழு நோயாளி தான் பிச்சை எடுத்து வந்திருந்த சாப்பாடை அங்கு சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு பகிர்ந்து கொடுத்து கொண்டு தானும் அதனை உண்டுகொண்டிருந்தான். இதனை பார்த்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று சாப்பாடு கேட்டார். தொழு நோயாளியும் அவர் சாப்பாடை பகிர்ந்து கொடுத்தார்.

உடனே காசி விஸ்வநாதர் அந்த நோயாளியிடம் தான் யார் என்று தெரிகிறதா என கேட்டார். அதற்க்கு அவர் பதிலளிக்க வில்லை. உடனே கோபமாக நான் யார் என்று இன்னும் தெரியவில்லையா என்றார் அதற்க்கு அந்த தொழு நோயாளி சற்று அமைதியாக சொன்னார் “என்னிடம் யாசகம் கேட்பவர் ஒருவர்தான். அவரும் இந்த காசி விஸ்வநாதர் மட்டும் தான்”  என கூறியதும் காசி விஸ்வநாதர் அதிர்ச்சி அடைந்தார். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment