ரஹ்மான் தமிழில் பாடியதால் வெளியேறிய வட இந்தியர்கள்……….!

சென்னை: தமிழ் பாடல்கள் அதிகம் என்று கூறி ரஹ்மானின் இங்கிலாந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வட இந்தியர்களுக்கு ரஹ்மான் ஒரு தமிழன் என்பது தெரியாதோ?
இங்கிலாந்தில் உள்ள வெம்ப்ளி பகுதியில் கடந்த 8ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேற்று இன்று நாளை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வட இந்தியரகள் அதாவது இந்திக்காரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
ரஹ்மான் அதிக அளவில் தமிழ் பாடல்களை பாடியதால் கடுப்பாகி வெளியேறியதாக தெரிவித்துள்ளார்கள்.

டிக்கெட்

நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே கிளம்பிச் சென்ற புண்ணியவான்கள் வீட்டிற்கு போனதும் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு ட்வீட் போட்டனர். ரஹ்மானையும் விமர்சித்தனர்.



தெரியாதோ?

நிகழ்ச்சியின் தலைப்பே நேற்று இன்று நாளை என்று தூய தமிழில் இருப்பது தெரிந்து தானே நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நிகழ்ச்சியில் ரஹ்மான் பெரும்பாலும் இந்தி பாடல்களை பாடியுள்ளார். சொற்ப தமிழ் பாடல்களுக்கே ஓடிப் போயுள்ளனர்.




மொசார்ட் ஆப் மெட்ராஸ்

ரஹ்மானை மொசார்ட் ஆப் மெட்ராஸ்( சென்னை) என்று தான் சொல்கிறோம். அங்கேயே தமிழ் வந்துவிட்டதே. அவர் இரண்டு ஆஸ்கர் வாங்கியபோது இந்தியராக தெரிந்தார் தற்போது தமிழில் பாடியதால் தமிழராகிவிட்டாரா? இசைக்கு மொழி இல்லை என்பது தெரியாதவர்கள் தான் ரஹ்மான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும்.




தமிழன்டா

ரஹ்மான் பாலிவுட் ஏன் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கலாம். அதை கேட்டு இந்தி, ஆங்கிலம் பேசும் மக்கள் மயங்கலாம் ஆனால் அவர் தமிழர்கள் கொண்டாடும் ஒரு தமிழர் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
author avatar
Castro Murugan

Leave a Comment