லவ்_ஜிஹாத்_துவங்கியவர்கள்_யார்….? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்

கேரள மாநிலத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தை மட்டுமே குறி வைத்து பிஜேபி,ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்க பரிவாரங்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருவது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்..
ஆனால் இந்த நாட்டில் லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்களை காதலித்து திருமணம் முடித்து பாரதீய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து ஒரு சமூகத்தை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிப்பதை பாரதீய ஜனதா கட்சியினர் நிறுத்த வேண்டும்..
அசோக் சிங்கால் மகளை திருமணம் முடித்த முக்தார் அப்பாஸ் நக்வி, முரளி மனோகர் ஜோஷி மகளை திருமணம் முடித்த ஷா நவாஸ் ஹுசேன், சுப்பிரமணியன் சுவாமி மகளை திருமணம் முடித்த நதீம் ஹைதர் போன்ற லவ் ஜிஹாதிகளுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்து விட்டு கேரள மாநில அரசையும், முஸ்லிம் சமூகத்தையும் வெறுப்பு பிரச்சாரம் மூலம் பெரும்பான்மை சமூகத்திலிருந்து பிரிக்க நினைப்பது கனவில் கூட முடியாதது என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published.