இனவெறியை கண்டிக்காத டிரம்ப்!

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அவரது இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை குழு கூண்டோடு விலகியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அவரது இணைய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை தெரிவிக்கும் குழுவில் ஏழு பேர் உண்டு. அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீலும் அடங்குவார்.
தற்போது இவர்கள் ஏழு பேரும் கூட்டாக எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தேச பாதுகாப்பு விவகாரங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இணைய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து போதிய அக்கறை செலுத்த வில்லை என்றும், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்றும் டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்துள்ள இவர்கள், தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment