மெர்சல் படத்திற்கு ஆதரவாக ..அஜித் ரசிகர்களும் பா.ஜா.கவிற்கு எதிராக விமர்சனம்!


Image result for விஜய் அஜித்  hd wallpapers
இளைய தளபதி  விஜய்  நடித்து தீபாவளிக்கு வெளியான  மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறியதற்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாமல்  அஜித் ரசிகர்களும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
தளபதி ரசிகர்கள் என்று இல்லாமல் தல ரசிகர்கள் மற்றும் முக்கியமாக  பொதுவான  மக்களையும்  மெர்சல் படம் ஈர்த்துள்ளது. அதனால் அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
பாஜகவின் இந்த கருத்திற்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் மற்றும் தளபதி ரசிகர்கள், கண்டனம் தெரிவித்துவந்த நிலையில் தற்போது தளபதிக்காக தல ரசிகர்களும் குரல் கொடுக்கின்றனர்.
ஆம். தளபதி ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் தற்போது மெர்சல் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக மக்கள்  பாஜகவிற்கு எதிராக  கொதித்து கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்று பிரச்சன்னையை எழுப்புவது அந்த கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துதும். இரண்டு தரப்பு ரசிகர்களுமே மெர்சல் படத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பா.ஜா.க எதிராக கூறி வருகின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *