துாத்துக்குடியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் : ஆட்சியரிடம் மனு

0
180

துாத்துக்குடி பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுந்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன் மாவட்ட ஆட்சியர்க்கு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, இந்தியாவில் முதல்முதலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆதிச்ச நல்லுாரில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும்.2004 ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் இன்று வரை வெளியிடப் படவில்லை.

உடனே அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.இது போல் துாத்துக்குடி மாவட்டத்தில் அந்த கால மக்கள் வாழ்ந்த பகுதியாக அறிஞர்கள் சுட்டிக் காட்டும் அகரம்,வடக்கு வல்லநாடு, முறப்பநாடு, வசவப்பபுரம், கருங்குளம்,விட்டிலாபுரம்,கொங்கராயகுறிச்சி,ஸ்ரீவைகுண்டம்,திருப்புளியங்குடி, புதுக்குடி,வெள்ளூர்,கால்வாய்,அப்பன் கோவில், மாரமங்கலம், கடம்பூர் பறம்பு, ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.சங்க நிர்வாகிகள் கந்தையா, சங்கரசுப்பு, தாமோதரன் ஆகியோர் மனு அளிக்கையில் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here