சட்ட விரோதமாக வெளிநாட்டு இன்ஜீன்களை பயன்படுத்தி ,மீன் பிடித்த அமைச்சரின் ஆதரவாளர்கள் …


மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை மீனவர்கள் பெற்றுவரும் நிலையில்
சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால்
மீன்வளம் பாதிக்கப்படுகிறது.
சீன இன்ஜின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின்
பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று
மீனவர்கள் கருதுகின்றனர்.
இன்று வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தனர்.
கண்மூடித்தனமாக போலிஸ் தடியடி நடத்தியுள்ளது. கடிவாளமற்ற குதிரையாக போலிஸ் செயல்படுகிறது.
தாக்குதலை எதிர்கொண்டு  மக்கள் உறுதியாக நின்றனர். வேறு வழியின்றி சீன இன்ஜின் பயன்படுத்தப் படாது என்று இப்போது அறிவித்துள்ளனர்.

இப்போது அறிவித்துள்ள புத்திசாலிகள்
ஏன்  மக்கள் மீது தடியடி நடத்த வேண்டும்? காட்டுதர்பாரை அரங்கேற்ற வேண்டும்?
போலிஸ் ஆட்சியை நோக்கி தமிழகம் நகர்கிறதா?
போராடுவதையே தேசவிரோதமாக அனுகும் போலிஸின் நடவடிக்கையை
எவ்வளவு காலம் அனுமதிக்கப் போகிறோம்?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *