விடைபெற்றார் வித்யாசாகர் ராவ் !! சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா முதல்வர் பங்கேற்பு

தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதையடுத்து , இது வரை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று பிரியா விடை பெற்றார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக  பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். தமிழக கவர்னராக பன்வாரிலால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று  பிற்பகலில் அவர் சென்னை வர உள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று மும்பை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதலமைச்ர்சர்  ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி, ஓபிஎஸ்  உள்ளிட்டோர் வித்யாசாகர் ராவிற்கு பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.

கடந்த ஓராண்டாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், தனக்கு ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்  கொண்டார்.

Dinasuvadu desk
Tags: #Politics

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

26 mins ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

42 mins ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

1 hour ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

8 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

11 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

13 hours ago