“மக்கள் விரும்பினால் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் தயார்”. – நடிகர் செந்தில்

நடிகர் செந்தில் அதிமுக கட்சியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்.ஜெயலலிதா இவரை கட்சியின்  கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக நியமித்து இருந்தார்.

இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபடுவார்.ஆகையால் இவரும் ஜெயலலிதாவின் நம்ம்பிக்கைக்கு உரியவராக இருந்து வந்தார்.

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னர் நிலைமை அப்படியே தலைகிழ மாறியது.பல அணிகள் பல தலைமைகள் என்று மாறிப்போனது அதிமுக கட்சி.

ஆனால் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்கள் விரும்பினால் என்னை துணை முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார் என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment