சினிமா
தேசபற்றை சோதிக்காதிர்கள் : கமலஹாசன் டாக்
தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன் வில்கர், டி.ஒய்.சந்திரகுட் ஆகியோர் கொண்ட பென்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கபடும் பொது எழுந்து நிற்க தேவை இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம். எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள்.
விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர். சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே!
என தெரிவித்துள்ளார்.
