இன்று நேதாஜியின் குருவான குருவான சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள்…


வரலாற்றில் இன்று நவம்பர் 5, (1870) நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ்
அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் .
இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” என்றார். .அப்பொழுது கூட தன் வீட்டை ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் . மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அவரை வழியனுப்பினார்கள். வங்கதேசத்திலும் இவர்
இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகிற அளவுக்கு இவரின் பணிகள் மனிதநேயம் தோய்ந்ததாக இருந்தது . மனிதநேயம் மற்றும் தேசப்பற்று இரண்டிலும் ஜொலித்த இந்த நாயகனின் பிறந்தநாள் இன்று .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *