அதிகாரத்தில் தங்கைக்கு பங்கு கொடுத்த அண்ணன்….!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அரசியலில் தனது தங்கைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளார்.
வட கொரிய இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பரப்புரை பிரிவு துணைத் தலைவராக கடந்த 2014ஆம் ஆண்டு தனது தங்கையான கிம் யோ ஜாங்கை, அதிபர் கிம் ஜாங் உன் நியமித்தார். அப்போது முதல் தொழிலாளர் கட்சிக்குள் கிம் யோ ஜாங்கின் கை ஓங்கி வருகிறது. இந்நிலையில் அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த பொலிட்பீரோ உறுப்பினராகவும் கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொலிட்பீரோ உறுப்பினர்கள் பதவிகளையும் கிம் ஜாங் உன் மாற்றி அமைத்துள்ளார். கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு பொலிட்பீரோ உறுப்பினர்கள் பதவி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது சொந்த மாமா என்றும் பாராமல் ஜங் சாங்கை பதவியில் இருந்து நீக்கினார் கிம் ஜாங். அதன்பின் தேச துரோக குற்றத்துக்காக அவர் கொல்லப்பட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment