கொஸ்தலை போராட்டம் – ஒரு சிறு வெற்றி…

கொசஸ்தலை ஆற்றை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துதான்  சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம்
அறிவித்திருக்கிறது.இப்பிரச்சனையில் இடதுசாரி மற்றும் வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் தொடர் முயற்சி செய்துவருகின்றனர். எனவேதான் அவ்வளவு உற்சாகம்.நிச்சயமாக இது ஒரு சிறு வெற்றி.இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வரும் அனைவருக்குமே இந்த செய்தி மகிழ்ச்சிதான்.

சென்னை- மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் நுங்கம்பாக்கத்திலுள்ள வட்டார அலுவலகம் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் நவம்பர் 1 அன்று பதிவேற்றம் செய்துள்ள ஆய்வறிக்கையை பாரீர்.TANGEDCO நிறுவனம் சட்டத்தை மீறி, எந்த அனுமதியுமின்றி எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமித்து, எண்ணூர் நெடுஞ்சாலையின் பாலத்தின் கீழ் 350 மீட்டர் நீளமும்,
6 மீட்டர் அகலமும் உள்ள சாலை அமைத்ததாக உறுதி செய்யப் பட்டுள்ளது.

TANGEDCO-வால் அமைக்கப்பட்ட சாலை எண்ணூர் கழிமுகத்தின்
இயற்கையாக உள்ள நீர் ஓட்டத்தை தடுப்பதால் அப்பகுதியில் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும் எண்ணூர் கழிமுகத்தை நம்பியிருக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடும்.
மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்திடமிருந்து வாங்க வேண்டிய எந்த அனுமதியும் வாங்கப் படவில்லை”என்று இவ்வறிக்கையில் தெளிவாக மத்திய அமைச்கம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.