ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட ‘தளபதி’ விஜய்

விஜய் தனது ரசிகர்களிடம் எப்போதும் ஒரு நல்ல நட்புடன் பழகுகிறவர். தனது ரசிகர்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடக்க முயல்பவர்.

இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் காவலன் இதனை பிரண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் இயக்கினார். இதில் நடிகை அசின், வடிவேலு, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அந்த திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜய் தனது ரசிகர்களிடம் “நண்பா என் படத்தை பாருங்க, சந்தோஷமா இருங்க, புடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்கின்றேன்.

ஆனால், இந்த பால் அபிஷேகம் எல்லாம் வேண்டாம் நண்பா, அதை பசியில் வாடும் குழந்தைகளுக்கு தரலாம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.