விவேகம் முதல் நாள் வசூல் மறைக்கபடுகிறதா??!!!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் விவேகம். இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது, பாடல்கள், டீசர், ட்ரைலர் என அனைத்துமே செம்ம வரவேற்பு பெற்றது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, ஆக்‌ஷன் படத்தில் செண்டிமெண்ட் தூக்கலால் ஒரு சில ரசிகர்களை இப்படம் பெரிதும் கவரவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் கண்டிப்பாக ரூ 100 கோடியை தாண்டிவிட்டது, ஆனால், இதுவரை யாரும் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க மறுக்கின்றனர்.
இதில் குறிப்பாக விவேகத்தின் முதல் நாள் வசூல் என்பது மர்மமாகவே உள்ளது, கபாலிக்கு பிறகு தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படம் விவேகம்.
சோலோ ரிலிஸாக வந்த இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 16.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது, ஆனால், தூங்காவனம் படத்துடன் போட்டியாக வந்த வேதாளம் முதல் நாள் ரூ 15.5 கோடி வசூல் செய்தது கவனிக்கவேண்டியது.
மேலும், தற்போது GST-யால் டிக்கெட் விலையும் உயர்ந்துள்ளது, இருந்தும் ரூ 1 கோடி தான் விவேகத்திற்கு உயர்ந்துள்ளதா? என்பது ஒவ்வொரு ரசிகனின் கேள்வி.
இதுமட்டுமின்றி படம் சரியில்லை என்று டிக்கெட் முன்பதிவு குறைந்தது என்று கூறமுடியாது, தமிழகம் முழுவதும் முதல் நாள் டிக்கெட் அனைத்துமே ஆன்லைனில் விற்றுத்தீர்ந்தது.
இதை யாராலும் மறுக்க முடியாது, அப்படியிருக்க ஏன் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சரியான தகவலை யாரும் தரமறுக்கிறார்கள் என்பது பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment