கலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு !போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்ற திருமணம் ..

Image result for தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

திண்டுக்கல் மாவட்டநூலக அலுவலர் பழனிச்சாமி கரூர் காந்திகிராமத்தில் குடியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சார்ந்தவர்.இவரது மகன் வேல்முருகனுக்கும் கரூர் வெண்ணைமலை நாவல்நகர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மகள் நிவேதாவிற்கும் இருகுடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று (01.11.2017) காலை வெண்ணைமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். மாலை கரூர் சின்ன கொங்கு மண்டபத்தில் திருமண வரவேற்பு வைத்திருந்த நிலையில் சாதி ஆதிக்க வெறியர்கள் வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளைப் பரப்பி சாதி மறுப்பு திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் வரவேற்பு நடத்திட மண்டபம் தர மறுத்துவிட்டார்கள். நடைபெறவுள்ள திருமணத்தை நிறுத்தவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சாதி வெறி காதல்  ஜிகாத் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர்  கே.கந்தசாமி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.
2 இன்ஷ்பெக்டர்கள் 2 சப் இன்ஷ்பெக்டர்கள் 10 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் தற்போது  தான் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். சி.பி.எம் கட்சிக்கும்
காவல்துறைக்கும் அந்த ஜோடி  நன்றி தெரிவித்தது .
திருமணத்தை அவர்கள் விரும்பியபடி நடத்த முடியவில்லை.மண மகன் வீட்டில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 அனைவரும் ஜனநாயக  இயக்கங்களை  ஒன்றிணைந்து சாதி மறுப்பு திருமண தம்பதியர்களை பாதுகாத்திடுவோம்.
சாதி வெறியர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம்.
என்று போலீசார் உறுதி கொடுத்தனர் .

Leave a Reply

Your email address will not be published.