பிறந்தநாள் அன்று விமானத்தில் இருந்து குதித்த வாலிபர்..,

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.
தனது 30-வது பிறந்தநாள் அன்று தனக்குத் தானே சவாலான ஒரு இலக்கை அவர் நிர்ணயித்துக்கொண்டார். பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும்போது வயலின் இசைக்க வேண்டும் என்பதே அது.

தன் கைகளில் 50 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள ஒரு வயலின் மற்றும் அதை வாசிப்பதற்கான வில் தவிர வேறு எதுவும் இல்லாமல், கடந்த ஞாயிறன்று நியூ சௌத் வேல்ஸ்-இல் தன் இலக்கை நிறைவேற்றியுள்ளார் டோனலி.
தான் கீழே குதிக்கும்போது, தன் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘ஹேப்பி பர்த்டே’ பாடலை இசைத்துள்ளார் அவர்.

Leave a Comment