நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது, படத்தில் வேண்டுமானால் முதல்வராகலாம். குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது. முதலில் மக்கள் பிரதிநிதியாக வந்து பிரச்னையை தீர்த்துவிட்டு பிறகு முதல்வராகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனை அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் கூட்டாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment