வரலாற்றில் இன்று பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது…!

வரலாற்றில் இன்று – அக்டோபர் 26, 1977 – பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த நோய் சோமாலியாவில் உள்ள ஒருவருக்கு கடைசியாக வந்ததாக அறியப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது. எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தபின்னர் பெரியம்மை நோயின் தாக்கம் உலகில் குறைய ஆரம்பித்தது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment