சிறந்த நடிகராக சியான் விக்ரம் தேர்வு ……..!

சிறந்த நடிகராக சியான் விக்ரம் தேர்வு ……..!

சென்னை : 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், வில்லன்கள், காமெடியன்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பசங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை  மலையன் திரைப்படத்துக்காக நடிகர் கரணும், சிறந்த நடிகை விருதை பொக்கிஷம் திரைப்படத்துக்காக பத்மப்பிரியாவும், சிறந்த வில்லன் விருதை பிரகாஷ்ராஜும் பெற்றுள்ளனர்.
2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக மைனா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை ராவணன் திரைப்படத்துக்காக விக்ரமும், சிறந்த நடிகை விருதை மைனா திரைப்படத்துக்காக அமலாபாலும், சிறந்த வில்லன் விருதை திருமுருகனும் பெற்றுள்ளனர்.
2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக வாகை சூடவா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை விமலும், சிறந்த நடிகை விருதை இனியாவும், சிறந்த வில்லன் விருதை பொன்வண்ணனும்  பெற்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக வழக்கு எண் 18/9 தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்துக்காக ஜீவாவும், சிறந்த நடிகை விருதை கும்கி, சுந்தரபாண்டியன் திரைப்படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கும் சிறந்த வில்லன் விருதை விஜய் சேதுபதியும் பெற்றுள்ளனர்.
2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக ராமனுஜர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை ராஜா ராணி திரைப்படத்துக்காக ஆர்யாவும், சிறந்த நடிகை விருதை நயன்தாராவும் சிறந்த வில்லன் விருதை விடியல் ராஜும் பெற்றுள்ளனர்.
2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை காவியத்தலைவன் திரைப்படத்தில் நடித்த சித்தார்த் சிறந்த நடிகர் விருதுக்கும், காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகை விருதுக்கும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லன் விருதை பிரித்திவிராஜ் பெற்றுள்ளார்.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *