பாலியல் புகாரில் சிக்கும் மாணவர்களை தண்டிக்கலாமா..?

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கிய இறுதியாண்டு மாணவனின் தேர்வு முடிவுகளை, ஐ.ஐ.டி., நிர்வாகம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற வழக்கை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் முன் வந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த இறுதியாண்டு மாணவர் மீது, அதே, ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். விசாரணையில், அந்த புகார் உறுதியானதால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட அந்த மாணவரின் இறுதியாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடாமல், ஐ.ஐ.டி.,நிர்வாகம் நிறுத்தி வைத்தது.இதை எதிர்த்து தொடர்ந்து வழக்கில், ‘கல்லுாரி நிர்வாகத்திடம், மாணவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த தேர்வு முடிவுகளை கல்லுாரி நிர்வாகம் வெளியிட வேண்டும்’ என, அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, ஐ.ஐ.டி., கான்பூர், தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதியின் தீர்ப்பை, ஐகோர்ட் அமர்வு நிராகரித்தது. இதையடுத்து, அந்த மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில், என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால், என் தரப்பை விசாரிக்காமல், ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என, மனுவில் மாணவர் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக, நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் அமர்வு கூறியுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment