ஆட்டோவில் கடத்தி வந்த போதை பொருள்கள் :தூத்துக்குடியில் பரபரப்பு !!!

0
134
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜா டேவிட் தலைமையில் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் இரவு முதல்  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து  அதிகாலை 1 மணி அளவில் மோட்டை கோபுரம் அருகில் ஆட்டோவில் வந்து இறங்கிய நான்கு பேர் அதில் கொண்டு வந்த அட்டை பெட்டிகளை இறக்கினர். பின்னர் அருகில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகில் ஏற்ற முயன்றனர்.அப்போது வந்த போதை பொருள் கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டு பிடித்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.