சிறுநீரக கல் உருவாகுவது எப்படி?

நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரியா என பலவகையான உப்புகள் உள்ளன. இவை நாம் சாப்பிடும் உணவு வகைகளிலும் உள்ளன.

சாதாரணமாக இவ்வுப்புகள் சிறுநீரில் வெளியேறிடும். சில சமயம் இவற்றின் அளவு எல்லை தாண்டும் போது, இவை சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பாதையில் தங்கும். சிறுநீரகம் சிறுநீரகப்பை இவற்றை இணைக்கும் குழாய்கள் போன்றவற்றில் உப்புகள் படிகம் போல் படிந்து, சிறுக சிறுக சேர்ந்து, கல் போல் பெரிதாகும். இதுதான் சிறுநீரகக்கல்.

சிறுநீரகப்பையின்  புராஸ்டேட் வீங்கிக் கொள்ளும் போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும் சிறுநீரகக்கல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் பாதையில் அழற்சி ஏற்படுவோருக்கும் சிறுநீரகக்கல் தோன்றும். பேராதைராய்டு எனும் ஹார்மோன்சுரப்பியின் மிகையான பணியினால் கால்சியத்தின் அளவு அதிகமாகி சிறுநீரகக்கல் தோன்றும்.
author avatar
Castro Murugan

Leave a Comment