மெர்சல் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் வறுபடும் பாஜக…! மீம்ஸ் போட்டே ஓட்டுராணுக….


இளைய தளபதி விஜயின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்திற்கு மிரட்டல் விடுத்ததன் மூலம் ஆப்பசைத்த குரங்காக தமிழக பாஜக-வினர் மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர். அவர்களை இவர்… அவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பலரும் அடி அடி என அடித்து துவைத்துக் கொண்டிருக்கின்றனர். சமூகவலைத்தளங்களிலும் பாஜக செம்மையாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.

அதற்கு சில சாம்பிள்கள்:

வில்லவன் ராமதாஸ் : முந்தா நேத்து மோடி பார்டர்ல போய் மணிக்கணக்குல ஸீன் போட்டாரு. கண்டுக்க நாதியில்ல… வடிவேலு வெறும் டிஜிட்டல் இந்தியான்னு ஒரே ஒரு வசனம் சொன்னதும் பாஜக கூடாரமே அலறுது.

சூர்யகுமார் : ஜமெர்சல் படத்த பார்த்தே ஆகனும். அட பிஜேபி மங்குனிகளா.. கடைசில என்னையும் விஜய் ரசிகன் மாதரி பேச வச்சிட்டிங்களேடா!? ஜமெர்சல்அம்மு ஜனனி : முன்னெல்லாம் ஒரு படத்துக்கு ஆளும் கட்சில இருந்து எதிர்ப்பு வரும்… இப்ப என்ன ஆளே இல்லாத கட்சில இருந்து எதிர்ப்பு வருது…!!

மாணிக்க சேதுபதி: மெர்சல உடனே இந்தில டப் பண்ணுங்க ‘பாகுபலிய ஒரு கை பாப்போம்.‘எல்லாம் அக்கா செயல்’ராஜ்குமார் செல்லம்பிள்ளை : விஜய் மரியாதையாக லாபத்தில் 10 சதவிகித கமிஷனை தமிழிசை, எச். ராஜா, பிஜேபிக்கு கொடுத்துவிட வேண்டும் !!

ஜோஸ் கிஸ்ஸிங்கர் : நடிகர் ஜோசப் விஜய் தனது வருமானவரி தாக்கல் விபரங்களை வெளியிடனுமாம்.. கேட்கிறார் ஹரிஹர ராஜ ஷர்மா…. முதல்ல ஒங்க கட்சி வாங்குற நன்கொடைக்கு கணக்கு சொல்லு.

ஜோசப் டிவிஏ : அனிதா தற்கொலை – ஊரே கதறுச்சு. பாஜவும், மருத்துவர்களும் வேடிக்கை பார்த்தனர். மெர்சல் – பாஜகவும், மருத்துவர்களும் கதறுகிறார்கள், மக்கள் சிரிக்கிறார்கள்.

டி.எஸ்.கவுதமன் : மெர்சல் படத்துக்கு பெரிய அளவில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கலைன்னு பதட்டத்தோட இருந்த படக்குழுவின் நெஞ்சில் பால் வார்த்தது போல மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கக்கோரி வழக்கு தொடுப்பேன்னு தமிழிசை சொல்லியிருக்காங்க! இனி இதை வச்சே பெரிய `ஹிட் ஆக்கிடுவாங்க!

நெல்சன் சேவியர் : மெர்சல் படக் காட்சிகளை நீக்க கூடாதென அஜித் ரசிகர்களின் பதிவுகளையும் மீம்களையும் பரவலாக பார்க்க முடிகிறது. இதற்கு மேலுமா சினிமா ரசிகர்களுக்கு அரசியல் தெளிவில்லை என்று சொல்கிறீர்கள். கலைப் போட்டிக்கும் அரசியல் ஆட்டத்துக்குமான தெளிவான வித்தியாசத்தை நுட்பமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். விசில்களின் சத்தம் திரையை ரசிக்க மட்டுமில்லை, சில நேரங்களில் திரையை கிழிக்கவும் செய்யும்.

நரேன் ராஜகோபாலன் : நாங்கள் யாரும் உங்களை ஹரி ஹர ராஜ சர்மா என்று அழைப்பதில்லை. ஏனென்றால் நீங்கள் உங்களை ராஜா என்று அழைப்பதை தான் விரும்புகிறீர்கள்.
அப்படி இருக்கும் போது, நேற்று வரை ‘விஜய்’ எப்படி திடீரென ‘ஜோசப் விஜய்’ ஆனார்?

கவிஞர் பிரியன் : ஒத்தப் படத்தப் பத்திப்பேசி உசுப்பேத்தி விட்டீக.. வசூல் நெறைய வைச்சீக.. ருசி பாத்தான் கலைஞன்.. இனி பத்துப்படம் அடுத்து வருமே என்ன செய்வீக.. பட்டையத்தான் கௌப்புவாய்ங்க எங்க போவீக..

ஏஜி சிவகுமார் : அமைதியா இருந்திருந்தா தீபாவளிக்கு மட்டும் கல்லா கட்டிட்டு போயிருக்க வேண்டிய படம். தமிழிசை பெரிசுபடுத்தி விட்டதால நேஷனல் லெவலுக்கு போயிடுச்சி. ரெண்டு நாளா இந்தியாவோட எல்லா செய்தி சேனல்லயும் பரபரப்பு செய்தியா ஓடிட்டு இருக்கு. அடுத்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து சொல்வார் போல.

பூபதி முருகேஷ் : மெர்சலுக்கு ராகுல் காந்தி ஆதரவு – கடைசில விஜய் அண்ணா டிரம்போட பேசுற மாதிரி மதுரை ரசிகர்கள் பண்ண போட்டோஷாப் உண்மையாகிடும் போலவே.

தோழர் சிவகுமார் : மெர்சலில் சாராயத்துக்கு 0ரூ ழுளுகூ என்பது தவறான கருத்து, சாராயத்திற்கு 50ரூ 60ரூ வரி விதிக்கப்பட்டுள்ளது என பாஜக தலைவர்கள் ஏன் துள்ளி குதிக்கிறார்கள் ?? காய்ச்சி விற்கிறவர்களுக்கு தானே தெரியும் எத்தனை சதவீத வரி என …

வாசுகி பாஸ்கர் : பெரியார் தன்னை நாயக்கர் என்று அழைத்துக்கொள்வதில்லை, விஜய் தன்னை ஜோசப் விஜய் என்று அழைத்துக்கொள்வதில்லை, ரஹ்மான் தன்னை திலீப்குமார் என்று சொல்லிக்கொள்வதில்லை, ஆனால் இதுபோன்ற எச்சை தனங்களைத்தான் காவி பக்தாஸ் கூட்டம் அவ்வப்போது தேவைப்பட்டால் செய்யும்.

பரிமளா ராஜன் : உன் கணக்கு சரின்னே வெச்சுக்குவோம், கிருஸ்தவன் சர்ச் கட்டினா எல்லா கிருஸ்தவனும் உள்ள போய் பிரேயர் பண்ணலாம், முஸ்லீம் மசூதி கட்டுனா எல்லா முஸ்லீமும் உள்ள போய் தொழுகலாம், ஆனா என் இந்து சொந்தங்கள் கட்டிய கோயிலுக்குள் எல்லா இந்துக்களுக்கும் போக முடியலையே அது ஏன்?

சண்முகம் கலைவாணி : ஒருவாரம் ஓட வேண்டிய படத்தை இப்படி ஒருமாசம் இழுக்கராணுவ

ஜபக்தாஷ்வளர் தங்கம் : மெர்சல் படத்துல விஜய் நடிச்சிருந்தாலும், மெர்சலானது என்னவோ பாஜக தான் …சாதி மறுப்பாளன்

ஜெயசிங் : இங்கு வெறும் விஜய் பிரச்சனை இல்லை.. ஜோசப் விஜய்தான் பிரச்சனை.. அப்படினா கடைசி வரை என் ஆதரவு அந்த ஜோசப் விஜய்க்குத்தான்.

அசோக் : மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்தேன்- எச். ராஜா ஜ தியேட்டருக்கு போனா வரவேற்பு பலமா இருக்கும்னு தெரிஞ்சு இருக்கு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *