உத்தர பிரதேசத்தில் அடுத்த சோகம்

உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதற்கு அலட்சியப் போக்கு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்கு சனிக்கிழமை கிளம்பிய உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.
மாலை 5.46 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 23 பேர் பலியாகினர், 72 பேர் காயம் அடைந்தனர்.
உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த வழியில் தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடந்துள்ளது. இதை ரயில் டிரைவருக்கு யாரும் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்ததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,
தண்டவாளத்தில் 15 மீட்டர் நீளம் அகற்றப்பட்டு அதை மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்ததை பார்த்த பணியாளர்கள் தங்களின் உயிரை காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
புதிதாக மாற்ற வைத்திருந்த 15 மீட்டர் தண்டவாளம் தடம் புரண்ட ரயிலின் ஒரு பெட்டிக்கு அடியில் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.

Leave a Comment