இலங்கை அணி வீரர்களை கதற வைக்கும் தல தோனி!!!

0
134
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான், உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது. 
இந்தப் போட்டி, தோனியின் 300-வது போட்டியாக அமைய உள்ளது. 2004-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அறிமுகமான தோனி, இதுவரை 9 ஆயிரத்து 608 ரன்களை குவித்துள்ளார். 
சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங்குகளை செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்கவும் தோனிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரும், சங்ககராவும் 99 ஸ்டம்பிங்குளை வீழ்த்தி சமநிலையில் உள்ளனர். அதேபோல், அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் வெளியேறிய வீரர் என்ற புதிய சாதனையும் தோனியின் வசம் வர வாய்ப்புள்ளது.இந்நிலையில் விக்கெட் கீப்பரான தோனி, நேற்று பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டார்.