வாட்ஸ்அப், வைபர் டேட்டாவைப் பாதுகாக்க..

அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், வைபர் போன்ற ஆப்ஸ்களிலிருந்து உங்களுடைய தகவல் பகிர்வுகளை பாதுகாத்து வைக்க நினைத்தால் அதனை எளிதாக பேக்கப் செய்து கொள்ளும் வழிகளை இப்போது அறிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப் தகவலை பேக்கப் செய்ய

வாட்ஸ்அப் செயலியைப் பொறுத்தவரை கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் தளங்களில் பேக்கப் செய்து கொள்ள வசதியுள்ளது. இதன் மூலம் போன் செயலிழந்தாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அச்சமயங்களில் பேக்கப் தகவல்களை பெறுவது எளிதாக இருக்கும்.

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பட்டனைக் கிளிக் செய்து நுழையவும். அதில் Chats என்பதைக் கிளிக் செய்தால் வரும் மெனுவில் chat Backup என்பதைக் கிளிக் செய்யவும். அதில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள backup என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். ஆன்லைன் சேமிப்பகமான கூகுள் டிரைவில் சேமிக்க back up to google drive என்றுள்ளதைக் கிளிக் செய்யவும். வீடியோக்களையும் பேக்கப் செய்ய கீழுள்ள Include Videos என்பதை ஆன் செய்து கொள்ளவும்.

வைபர்

வைபர் ஆப்-ல் செட்டிங்ஸ் நுழைந்து Viber Backup என்பதைக் கிளிக் செய்ய வும். அதில் பேக்கிங் அப் என்பதைக் கிளிக் செய்து பேக்கப் செய்யவும்.

Leave a Comment